பாஜக ஆட்சியில் ஊழல் இல்லையா? யார் சொன்னது... கேட்கிறார் குஷ்பு
பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என்று கூறுவதில் உண்மையில்லை என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: பாஜக ஆட்சியில் செய்யும் ஊழல்களை மூடி மறைத்து விடுகிறார்கள் என்றும், ஊழலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு பதவிகளை கொடுக்கின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஐப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகதான் இருக்கும் என்றார்.
இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது என்றார்.

காங்கிரஸ் கட்சி திட்டங்கள்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை மாற்றி பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். இது ஊழல் இல்லாத அரசு என்று கூறுகின்றனர். பாஜக ஆட்சியில் செய்த ஊழலை மூடி மறைக்கின்றனர். ஊழல் இல்லாத அரசு என்றால் ராஜஸ்தானில் ஜெயித்திருக்க வேண்டுமே என்று கேட்டார் குஷ்பு.

ஒரு வளர்ச்சியும் ஏற்படாது
இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது போல மத்திய அரசின் இந்த பட்ஜெட்டால் எந்த வகையிலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார்.

குற்றவாளிக்கு தண்டனை
நாட்டில் பாலியல் கொடுமைக்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் வாதாடக்கூடாது என்றும் குஷ்பு கூறினார்.

ஓட்டை உடைசல் பஸ்கள்
தமிழகத்தில் பஸ்கள் எதுவுமே சரியில்லை. ஓட்டை உடைசல் பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். பஸ் கட்டணத்தை பைசாவில் குறைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications