ஓடிப் போன காதலி கூட திரும்பி வருவா.. பலத்த கரகோஷத்தை வாரிக் குவித்த குஷ்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த பிரமாண்டமான காங்கிரஸ் பொதுக் கூட்டம் அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். அதிலும் நடிகை குஷ்புவின் பேச்சுக்கு பலத்த கைத்தட்டல் கிடைத்தது.
திருவண்ணாமலையில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
காங்கிரஸாரே எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது. இது பிற கட்சியினரையும் கூட வியப்படைய வைத்தது. இருப்பினும் தலைக்கு 200 ரூபாய் கொடுத்து ஆட்களைத் திரட்டி வந்ததாக கூறுகிறார்கள். ஆனாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு திருவண்ணாமலையில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது ஊர் மக்களை ஆச்சரியப்படுத்தியது.
கூட்டத்தில் குஷ்பு பேச்சுக்கு வழக்கம் போல கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.. அவரது பேச்சிலிருந்து...

துடிக்கும் மோடி அரசு
மத்தியில் ஆளும் மோடி அரசு, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் மாற்றம் செய்ய துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டபிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தனர்.

பங்கு போடப் பார்க்கிறார்கள்
தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஷும் அதில் கலந்துகொண்டு சிறப்பான சட்டம் என பாராட்டிவிட்டு தற்பொழுது மாற்றம் செய்ய முயற்சி செய்வது, முழுக்க முழுக்க பெரிய முதலாளிகளுக்கு பங்கு போட்டுக்கொடுக்கதான்.

மானம் மரியாதை சந்தோஷம்
நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலமாக விவசாயிகளின் நிலங்களை மட்டும் எடுக்க நினைக்கவில்லை. விவசாயிகளின் மானம், மரியாதை, சந்தோஷங்களை சேர்த்து எடுக்க முயற்சி செய்கின்றனர்.

325 கோடி ஸ்வாஹா
மோடி ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 14 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா... ரூ. 325 கோடி . இவ்வளவு கோடிகளை செலவு செய்து வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி, சொந்த நாட்டுக்குள் ஏன் பயணம் செய்யமாட்டேன் என்கின்றார்.

பதில் சொல்லுங்க பார்ப்போம்
ராகுல்காந்தியை காணவில்லை என பாஜகவினர் பிரசாரமே செய்தனர். ஆனால் அப்படிச் சொன்ன பாஜகவினருக்கு ராகுல் காந்தி திரும்பி வந்ததும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர்.

ஓடிப் போன காதலி கூட திரும்பி வருவா
மாநிலத்தில் நடக்கும் ஆட்சி பற்றி யாரோ ஒருவர் கோவில் சுவற்றில் எழுதிய வார்த்தைகளை பாருங்கள். `ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா... போன கரண்டு திரம்ப வராது...!

இந்த அம்மாவா மக்கள் முதல்வர்
இந்த அம்மாவை மக்கள் முதல்வர்னு சொல்றாங்க. அவங்க ஆந்திராவுல சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்காக எழுதின கடிதத்தை படிச்சா... மக்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி இல்ல... ஆந்திரா முதல்வரோட கைக்குலுக்குற மாதிரி இருக்கு என்றார் குஷ்பு.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications