வைரவிழாவில் ஒதுக்கிய திமுக... சத்தியமூர்த்தி பவனில் கண்டுக்காத அரசர்- வேதனையில் குஷ்பு

கருணாநிதி வைரவிழாவிற்கு அழைக்காமல் திமுக ஒதுக்கியது குஷ்புவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்புவிற்கு அழைப்பில்லை.

அந்த சோகம் ஒருபுறம் இருக்க, சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி வந்த போது குஷ்புவை ஓரங்கட்டிவிட்டார் திருநாவுக்கரசர். இந்த இரண்டு சம்பவங்களுமே குஷ்புவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாம்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. சட்டசபை வைரவிழாவை தேசிய தலைவர்களை அழைத்து கொண்டாடி விட்டார்.

தேசிய தலைவர்கள்

தேசிய தலைவர்கள்

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள்

காங்கிரஸ் கட்சி தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மாநில தலைவர் திருநாவுக்கரசர், உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். ப.சிதம்பரத்தில் ஒரு ஓரத்தில் ஒதுக்கி விட்டதுதான் சோகம்.

வந்த நக்மா வராத குஷ்பு

வந்த நக்மா வராத குஷ்பு

கருணாநிதி விழாவில் மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா பங்கேற்று நடுநாயகமாக அமர்ந்திருந்தார். ஆனால் குஷ்புவிற்கு அழைப்பே அனுப்பவில்லையாம். இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

ஒட்டாத குஷ்பு

ஒட்டாத குஷ்பு

கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தவர் குஷ்பு. ஆனால் ஸ்டாலின் மீது அந்தளவிற்கு ஒட்டுதல் கிடையாது. இது தலைவர் பற்றிய பேட்டியிலேயே பகிரங்கமாக வெளிப்படுத்தியவர். அப்போது நடந்த சர்ச்சையில்தான் கட்சியை விட்டே வெளியேறினார். ஆனால் நக்மா சமீபத்தில் கூட ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

ஒதுக்கிய அரசர்

ஒதுக்கிய அரசர்

அங்கேதான் அப்படி என்றால் சத்தியமூர்த்தி பவனிலும் குஷ்புவிற்கு உரிய மரியாதையில்லையாம். சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி வந்தபோது குஷ்புவை ஓரங்கட்டி விட்டாராம் திருநாவுக்கரசர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களினால் குஷ்பு மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+