போலீசார் மிரட்டலைத் தொடர்ந்து சசிகலாவை சிறைபிடிக்கும் போராட்டத்தை கைவிட்ட கூவத்தூர் பொதுமக்கள்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை சிறைபிடிப்போம் என கூவத்தூர் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் போலீசார் மிரட்டலைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சி இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவை சிறைபிடிக்கப் போவதாக கூவத்தூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் மிரட்டல் விடுத்த நிலையில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்களை மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா. அங்கிருந்து எம்.எல்.ஏக்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

இதனால் அதிர்ந்து போன சசிகலா நேரடியாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரிசார்ட்டுக்கு சசிகலா சென்றுள்ள நிலையில் கூவத்தூர் கிராம மக்களை அந்த ஊருக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இது அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்தது. சசிகலா மற்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூவத்தூர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சசிகலாவும் எம்.எல்.ஏக்களுடம் உடனே கூவத்தூரை விட்டு வெளியேறாவிட்டால் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.
சசிகலா 3 மணிநேரமாக கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். அவர் வெளியே வரும் போது முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொதுமக்களின் பிரதிநிதிகளை போலீசார் சந்தித்து சிறைபிடிப்பு போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்படலாம் என பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒருவழியாக பொதுமக்கள் சமாதானமடைந்தனர்.
இதனால் 3 மணிநேர ஆலோசனையை முடித்து சசிகலா வெளியே வந்த போது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications