முதல்ல அதிமுக விட்டு தரணும்.. கேப்டன் ஓகே சொல்லணும்.. ஆனா அதுக்குள்ள ஆம்பூரை "எடுத்துகிட்ட" சுதீஷ்!
ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னை பார்க்கலாம் என தேமுதிக துணை செயலாளர் எல் கே சுதீஷ் கூறியதை பார்த்தால் அவர் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரோ என்றும் அதைத்தான் அவர் சூசகமாக கூறியுள்ளாரோ என்றும் கேள்வி எழுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் மட்டுமே நடைபெறுகிறது. இன்னமும் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை இருக்கின்றன. தேமுதிகவை பொருத்தமட்டில் அதிமுக கூட்டணியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணி
ஆனால் ஒவ்வொரு முறை தேமுதிக நிர்வாகிகள், அதாவது பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பேசும் போது நாங்கள் தனித்து போட்டியிடவும் தயார் என்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில்தான் இன்னமும் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு அவர்கள் எதிர்க்கும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். இப்படியாக பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

சட்டசபை தொகுதிகள்
இந்த நிலையில் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தேமுதிக புதிய உத்வேகத்துடன் பக்காவாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டசபை தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குடியாத்தம்
இதில் வேலூர் மண்டலத்திற்கு நான் தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன். 32 சட்டசபைத் தொகுதிகள் உள்ள இந்த வேலூர் மண்டலத்தில் 2011ஆம் ஆண்டு 7 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அது போல் வரும் தேர்தலில் 12 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளோம். 2006 இல் நடந்த தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நான் போட்டியிட்டேன்.

சூசகம்
வேலூர் மாவட்டம் எனது சொந்த மாவட்டம் என்பதால் எப்போதும் எனக்கு பாசம் உண்டு. இந்த முறை தேமுதிக தலைமை வாய்ப்பு கொடுத்தால் என்னை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆம்பூரில் நீங்கள் பார்க்கலாம் என்றார். ஆம்பூர் தொகுதியில் சுதீஷ் போட்டியிடுவதைத்தான் சூசகமாக அவர் சொல்லியுள்ளார் என்று தெரிகிறது. இந்த தொகுதியில் சுதீஷை நிறுத்த விஜயகாந்த் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த தொகுதியை அதிமுக விட்டுத் தர வேண்டும். இத்தனை இருக்கும் நிலையில் ஆம்பூர் தனக்குத்தான் என சுதீஷாகவே பிரகடனப்படுத்திக் கொள்வது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக
ஆம்பூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது. அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக வென்ற நிலையில் அந்த தொகுதி எம்எல்ஏ ஆர் பாலசுப்பிரமணி சபாநாயகரால் 2017இல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019இல் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை தோற்கடித்துவிட்டு திமுக வென்றது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications