பஸ் நிலையத்தில் போதையில் மயங்கிய இளம்பெண்- வாலிபர் ஓட்டத்தால் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே பஸ் நிலையத்தில் இளம்பெண் மயங்கி கிடந்தார். அவருடன் வந்த வாலிபர் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவால் சீரழியும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த மதுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இரவு 8 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தள்ளாடியவாறு வந்தார்.

ஆண்கள் அமரும் இருக்கைகள் பகுதியில் அவர் அமர்ந்தார். அங்கிருந்த பயணிகள் அவரை உடல் நலம் இல்லாதவர் என எண்ணி பரிதாபப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பெண் வாந்தி எடுத்தப்படி மயங்கி விழுந்தார். அதன்பிறகு தான் அவர் போதையில் இருந்ததை பொதுமக்கள் உணர்ந்தனர். பஸ் நிலையத்திற்கு வந்த போலீசாரும் அந்த பெண்ணை கண்டும் காணாமலும் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் லுங்கி, டிசர்ட் அணிந்த ஓரு வாலிபர் அங்கு வந்தார். அந்த பெண்ணை பிரான்சேரியை சேர்ந்த தன் நண்பரின் மனைவி என கூறி ஆட்டோவில் ஏற்றினார்.
பிரான்சேரிக்கு சென்றதும் இருவரையும் இறங்கும்படி ஆட்டோ டிரைவர் கூறினார். அவர்கள் இறங்க மறுத்ததால் பத்தமடை காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு போலீசாரை கண்ட வாலிபர் பயந்து போய் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறங்கி விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் சென்று விட்டார். சிறிது நேரத்தில் போதை தெளிந்ததும் அந்த பெண் உடனடியாக மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பதும் யார் என்பதும் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications