பட்டப்பகலில் பேராசிரியரிடம் சங்கிலி அறுப்பு – குடியாத்தத்தில் துணிகரம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: குடியாத்தத்தில் பட்டப்பகலில் பேராசிரியர் ஒருவரிடம் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ராதா. இவர் குடியாத்தம் நகரில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு பயிற்சி வகுப்பை நடத்த வருகை தந்தார்.

அப்படி வந்தவர் அந்த தனியார் கல்லூரிக்கு நடந்து செல்லும்போது பைக்கில் வந்த இரண்டு பேர் ராதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டனர்.
பட்ட பகலில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு நடந்தது. இதுப்பற்றிகுடியாத்தம் காவல்நிலையத்தில் ராதா புகார் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications