பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிவிட்டு சென்ற தாய் – மீட்கப்பட்ட குழந்தை!
கோவை: கோவை மாவட்டத்தில் சாலையோரத்தில் வீசப்பட்ட பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரிலுள்ள திருச்சி சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் வணிகவளாகம் அருகே புதன்கிழமை நள்ளிரவு சிறுநீர் கழிக்கசென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த ஒரு பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டள்ளது.

உடனே சந்தேகம் கொண்ட அவர் அந்த பையை திறந்து பார்த்தார். அதில், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
நிகழ்விடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அந்த குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு, இக்குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலமாக கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications