100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் லக்கானி முதல் ஆளாக ஓட்டுப் போட்டார்
சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று முதல் ஆளாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாத ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல் துறைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களும் வாக்களித்துள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் சென்னை அரும்பாக்கம் தொகுதியில் வாக்களித்தார். அதேபோல் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகனும் சென்னையில் வாக்களித்தார்.
100 சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல வேலைகளைச் செய்து வந்தது. இந்த நிலையில் இளைஞர்கள், முதல் முறை வாக்களிப்போர் மத்தியில் பெரிய எழுச்சி காணப்படுவதாக கூறப்படுவது 100 சதவீத வாக்குப் பதிவுக்காக பாடுபட்டோருக்கு நிச்சயம் ஆறுதலான செய்தியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications