அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும்? கேட்கிறார் ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவியில் நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அதிக அளவில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது நிகழ்ச்சிக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டாலும் எதிர்ப்பு குரல்களும் எழாமல் இல்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை வைத்து பாடல்களும், டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளும் எடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. அவர்களுக்கு எல்லாம் பதிலுக்கு பதில் கூறி திட்டி வந்தால் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இப்போது சினிமாவில் அவரது நிகழ்ச்சியைப் போல காட்சியமைக்கவே அவரது கோபம் அதிகரித்து விட்டது. இயக்குநர் ஜி.வி. பிரகாஷ், ஆர்.பாலாஜி ஆகியோர் மீது அவரது கோபம் திரும்பியது. இதுதான் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போல சினிமாவில் காட்சியமைத்த இயக்குநர், நடிகரை காட்டமாக திட்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இவர் கொடுத்த பதில் என டுவிட்டரில் பெரும் பஞ்சாயத்து ஆனது.

டுவிட்டருக்கு பை

டுவிட்டருக்கு பை

இந்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத லட்சுமி ராமகிருஷ்ணன், போதுமடா சாமி என்று டுவிட்டருக்கு ஒரு கும்பிடு போட்டார். அதன் பிறகும் அவரை பேட்டி கண்டு சொல்வதெல்லாம் உண்மை பற்றியே கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜிக்கு கேள்வி

ஆர்.ஜே.பாலாஜிக்கு கேள்வி

'புட் சட்னி' குழுவும் லட்சுமி ராமகிருஷ்ணனை பேட்டி கண்டு அதை யு டுயூப்பில் பதிவேற்றியுள்ளது. அதில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்பட்டது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்றும் கூறியுள்ளார். இது நான்கு சுவர்கள் மூடிய அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். இது ஆர் ஜே பாலாஜியைத்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

டீ சாப்பிட ஆசை

ஆணாக இருந்தால் நள்ளிரவு 2 மணிக்கு டீ கடையில் போய் டீ சாப்பிடுவேன் என்று கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது திரை உலக பயணம், இயக்குநர் ஆனது எப்படி.? சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்துவது ஏன் என்று கூறியுள்ளார்.அவரது முழு பேட்டியையும் பாருங்களேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress and Director Lakshmi Ramakrishnan interview in put chutney
Please Wait while comments are loading...