பொறுப்பை துறந்துட்டா போதுமா... என்னா ஒரு பொறுப்பற்றதனம்.. விஜய் டிவி மீது பாயும் லட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறுப்பு துறப்பு என்று போட்டு விட்டால் யார் மனதும் காயப்படாதா? இது என்ன பொறுப்பற்ற பதில் என்று விஜய் டிவி மீது பாய்ந்துள்ளார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், சொல்வதெல்லாம் பொய்... மேலே வைக்காதே கை - வெர்ஸன் 2 ஒளிபரப்பாக உள்ளதாக சமீபத்தில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் மீண்டும் தன்னை கிண்டல் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். போலீசிலும் புகார் அளித்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்

லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்

விஜய் டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டலடிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி வழக்கம் போல ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி ஆபசமான முறையில் இருந்ததாக பலரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

விஜய் டிவியின் பதில்

விஜய் டிவியின் பதில்

இந்நிலையில், விஜய் டிவியைச் சேர்ந்த பிரதீப் மில்ராய் பீட்டர் இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த விளக்கத்தில், ‘அது ஒரு ஃபன் ஷோ. ஆரம்பத்துல பார்த்துட்டு ஜாலியா இருக்கேனு அவங்களே எங்க சேனலுக்கே வந்து சொன்னாங்களே! திடீர்னு இப்ப ஏன் ஆவேசப்படறாங்கனு புரியலை. யார் மனதையும் புண்படுத்தறதுக்காக எந்த ஷோவையும் பண்றதில்லைங்கிறதை, ஒவ்வொரு ஷோவுக்கு

முன்னாடியும் ‘பொறுப்புத் துறப்பு'ங்கிற அறிவிப்புலயே போடுறோமே' என்று பதிலளித்துள்ளார்.

பொறுப்பற்ற பதில்

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: ‘கடைசியாக மறைவிலிருந்து விஜய் டிவி வெளியே வந்து விளக்கம்

அளித்துள்ளது. அடடா, என்ன ஒரு விளக்கம்! விஜய் டிவியின் பதில் மோசமானது.

இப்படி காயப்படுத்தலாமா?

பொறுப்புத் துறப்பு (Disclaimer) என்பது தெரியாமல் ஒருவரைக் காயப்படுத்துவதற்காக வெளிடுவது. ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே நான் காயப்பட்டுள்ளேன் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+