2000 ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2000 மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. துப்பாக்கியைக் காட்டி இலங்கை கடற்படை மிரட்டியதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 617 விசைப் படகுகளில் நேற்று இரவுக்கு மேல் கடலுக்குச் சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ஐந்து படகுகளி்ல ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மீனவர்களை மிரட்டி அங்கிருந்து போய் விடுமாறு எச்சரித்தனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு படகுகளைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து விரைந்தனர். இதுகுறித்துக் கூறிய ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் சகாயம் கூறுகையில், 2000க்கும் மேற்பட்ட மீனவர்களை துரத்தியடித்துள்ளது இலங்கைக் கடற்படை. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications