கருணாநிதி நலம் பெற வேண்டும்.. இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

மாநில, தேசிய தலைவர்கள் வந்து சென்றவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இலங்கை தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதம் ஒன்றையும் ஸ்டாலினிடம் கொடுத்தனர். அதில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications