அப்போ வீட்டில் கணக்கில் வராத பணம் இருக்கா? இதுதான் மாதவன் பிளானா??

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய மாதவன் - வீடியோ

  சென்னை: வீட்டில் உள்ள பணத்தை மொத்தமாக அடிக்கவே தீபாவின் கணவர் மாதவன் இந்த வருமான வரித்துறை நாடகத்தை அரங்கேற்றினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை காலை வந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது பெயர் மித்தேஷ் என்று கூறிய அவர் அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார்.

  காலை 10 மணிக்குப் பிறகு கூடுதல் அதிகாரிகள் வந்தவுடன் வருமான வரித்துறை சோதனை தொடங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வந்திருப்பதாக வந்த தகவலையடுத்து மீடியாக்கள் அங்கு குவிந்தன.

  தெறித்து ஓடிய நபர்

  தெறித்து ஓடிய நபர்

  அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர் போலீஸில் தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போதே சுவர் ஏறிகுதித்து தெறித்து ஓடினார் அந்த நபர்.

  மாதவன் மீது சந்தேகம்

  மாதவன் மீது சந்தேகம்

  தீபா இல்லாத நேரத்தில் தன்னை ஐடி அதிகாரி என கூறிக்கொண்டு வந்ததால், இது ஒருவேளை தீபாவின் கணவர் மாதவனின் வேலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

  மாதவன் ஏற்பாடு

  மாதவன் ஏற்பாடு

  இந்நிலையில் போலீஸில் சரணடைந்த அவர் மாதவன் கூறிதான் தான் ஐடி அதிகாரி போல் நடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகியுள்ளார்.

  எழும் சந்தேகங்கள்

  எழும் சந்தேகங்கள்

  மாதவன், மனைவி தீபா இல்லாத நேரத்தில் ஐடி அதிகாரி என ஒருவரை செட்டப் செய்து வீட்டிற்கு வரவழைத்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதாவது அண்மைக்காலமாக தீபா, தனது பேரவையில் பதவி தருவதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.

  மொத்தமாக அடிக்க திட்டம்?

  மொத்தமாக அடிக்க திட்டம்?

  இந்நிலையில் வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதை அறிந்துதான் அதனை மொத்தமாக அடிக்க மாதவனே இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அரசியல் கட்சி தொடங்குவதாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மாதவன். இதனால் கணவனும் மனைவியும் சில காலம் பிரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Deepa's husband Madhavan only arranged the IT raid Drama on saturday. This drama leads many doubts on Deepa that she has large amount of black money in her house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற