தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: வைகோ குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாவின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதிமுகவின் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாநாட்டை மதிமுக சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பூவை மு.பாபு வரவேற்புரை வழங்கினார்.
அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராசேந்திரன் மதிமுக கொடியை ஏற்றி வைத்தார். சட்ட திருத்த குழு செயலாளர் அருணாசலம் அண்ணா சுடர் ஏற்றி வைத்தார். இறுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தின் வளர்ச்சி
மாநாட்டில் பேசிய வைகோ, பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் ஒட்டுமொத்த சராசரியைவிட தமிழகத்தின் சராசரி விகிதம் குறைந்துள்ளதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக எத்தனை போராட்டங்கள் நடத்தியது என்றும் வினா எழுப்பினார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழ்நாட்டில் தினசரி, கொலை, கொள்ளை நடைபெறுகிறது. தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.
18 தீர்மானங்கள்
கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications