அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு அடி உதை.. புழல் சிறையில் அடைப்பு
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். இதைத்தொடர்ந்து 17 பேரையும் பத்திரமாக சிறைக்கு அழைத்து செல்வது தொடர்பாக நீதிபதி தருமன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11 வயது சிறுமி 15 பேரால் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க ஊசி போதை ஊசி போட்டும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலமானது.
இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சரமாரி தாக்குதல்
இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் ஆயத்தமாயினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.

நீதிமன்றத்தில் பதற்றம்
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 பேரையும் பத்திரமாக மீட்டு வேனில் அமர வைத்தனர். அப்போதும் வழக்கறிஞர்கள் வேனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு
இதையடுத்து மகிளா நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 17 பேரையும் பத்திரமாக அழைத்து செல்வது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி பேச்சுவார்த்தை
நீதிபதி தருமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications