ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.. அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன் என்று எதிர்கட்சி தலைவரும் திமுக பொருளாருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று அதிமுகவினர் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார்.
இதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் முத்தரசன், தா.பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் சீமான் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இருந்த முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின் அப்பல்லோவிற்கு இன்று மாலை வருகை தந்தார்.
மாலை 7.10 மணிக்கு மருத்துவமனைக்குள் சென்ற அவர் 7.25 மணிக்கு வெளியில் வந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். விரைவில் ஜெயலலிதா குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை நேரில் சந்தித்து முதல்வர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். ஆனால், முதல்வரை சந்திக்க முடியவில்லை என கூறினார். எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் ஸ்டாலினுடன் அப்பல்லோவிற்கு சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications