நல்லக்கண்ணு 91 வது பிறந்தநாள்... அரசியல் தலைவர்கள், பல்துறை பிரமுகர்கள் வாழ்த்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு இன்று தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி, தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அரசியல், பத்திரிக்கை, திரைத்துறை பிரபலங்கள் இன்று நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவருடன் பேசியதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ரயில்வேத் துறை தனியார்மயம் ஆகாது என்று தற்போது கூறும் பிரதமர் மோடி, முதலில் அதற்கு மாறான கருத்தை கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினர்.
அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று 91 ஆவது பிறந்த நாள் காணும் தோழர் நல்லகண்ணுவை செல்போனில் தொடர்புகொண்டு 120 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் தங்களின் 100 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கூறினார். அதற்குதோழர் நல்லகண்ணு நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று வைகோவிடம் கூறியதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர்களின் வாழ்த்துக்களைப் பெற்ற நல்லக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கொள்கைகளுக்கு எதிராக தற்போதைய செயல்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார். தொழில்துறை மற்றும் வங்கிகளை நாட்டுமையாக்க வேண்டும் என நேரு திட்டங்களை வகுத்ததாகவும், ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் புகுந்துவிட்டதாகவும் நல்லக்கண்ணு வேதனை தெரிவித்தார். இத்தகைய செயல்கள் நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications