அதிமுகவில் ‘விஷ விதை’.. ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே லீமா ரோஸ் தானாம்! அன்றே வார்னிங் கொடுத்த கேசிபி!
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிளவுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, லால்குடி தொகுதி எம்.எல்.ஏ லீமா ரோஸ் பெயர் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் லீமா ரோஸ் குறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தது.
இந்த நிலையில், வேலுமணி தரப்பிற்கும் தவெகவிற்கும் இடையே தொடர்பு ஏற்படுத்திய முக்கிய நபராக லீமா ரோஸ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே அதிமுக - தவெக கூட்டணி குறித்து முதன்முதலில் பேசியவர்களில் லீமா ரோஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பிளவு
முன்னதாக இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்த லீமா ரோஸ், பின்னர் எஸ்.பி. வேலுமணி மூலம் அதிமுகவில் இணைந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் வேலுமணி அணியுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக நடந்த அரசியல் ஆலோசனைகளிலும் லீமா ரோஸ் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றபோது, அங்கு லீமா ரோஸும் இருந்ததும் கவனிக்கத்தக்கது.
எஸ்பி வேலுமணி
இதையடுத்து, அதிமுகவின் ஒரு தரப்பினர், "வேலுமணி அணியும் தவெகவும் நெருக்கமாக வருவதற்கு லீமா ரோஸ்தான் முக்கிய காரணம்" என்று குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். அதேசமயம், வேலுமணி அணியினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படுவதாக கூறுகின்றனர். மேலும், எதிர்காலத்தில் தவெக அமைச்சரவை விரிவாக்கம் நடந்தால், வேலுமணி அணிக்கு முக்கிய பங்கு கிடைக்கலாம் என்ற பேச்சுகளும் நிலவி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி
அந்த அணியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள அதிகாரப் போட்டி வெறும் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல; எதிர்கால கூட்டணி மற்றும் அமைச்சர் பதவி போன்ற குறிவைத்து எடுத்து வைக்கப்பட்ட திட்டமிட்ட அரசியல் நகர்வு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லீமா ரோஸ்
இந்நிலையில் லீமா ரோஸ் குறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதமே அதிமுக எம்எல்ஏக்களுக்கும் பொதுக்குழு உறுப்பினருக்கும் பதவி கொடுத்து அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை பெற்றவர் லீமா ரோஸ் எனவும், பாஜக கண்ணசைக்கும் நேரத்தில் இந்த அவலம் எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறியிருந்தார் அதிமுக முன்னாள் எம்பி ஆன கேசி பழனிச்சாமி.
கேசி பழனிசாமி
எதிர்கால விளைவுகளை உணராமல் மாபெரும் வரலாற்று பிழையையும், மன்னிக்க முடியாத குற்றத்தையும் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். மார்டினின் மனைவி 2 மாதங்களுக்கு முன் அதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டிருக்கிறார். அதிமுக சட்ட விதிகளை உடைத்து எரிந்து தன் பணபலத்தால் தலைமையை கைபற்றியை எடப்பாடி தெரிந்தும் தெரியாமலே மார்ட்டின் மனைவி லீமாரோஸ் என்கிற விஷ விதையை அதிமுகவுக்குள் விதைத்திருக்கிறார் எனவும் சொல்லியிருந்தார் கேசி பழனிசாமி.














Click it and Unblock the Notifications