Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா! நீ எந்த ஊரு.. போலீஸிடம் போதையில் அலப்பறை செய்த நீல டிரவுசருக்கு மாவுக்கட்டு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபோதையில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி அலப்பறை செய்த நபர் "பாத்ரூமில்" வழுக்கி விழுந்ததால் அவருக்கு காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

ஒரு சிலர் மது குடித்துவிட்டால் குடித்ததே தெரியாத அளவுக்கு நைசாக வந்து சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவர். அத்துடன் காலையில்தான் எழுந்திருப்பர். இன்னும் சிலர் குடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் வம்பிழுப்பர். காலையில் போதை தெளிந்ததும் கேட்டால் எதுவுமே நினைவிருக்காது.

Left leg fractured for a drunkard who gave threat to police

ஆனால் சிலர் குடித்துவிட்டால் அவர்களின் உடலில் 10 ஆள் பலம் வந்துவிடும் போல! திடீரென வழியில் மடக்கி மதுபோதையில் இருக்கிறாரா என்று சோதனை செய்யும் போலீஸ்காரர்களிடம் வம்பிழுத்து பின்னர் ஸ்டேஷனில் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அடுத்த நாளே திருந்தி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பர்.

ஆனால் சில போதை ஆசாமிகள் நேராக போலீஸ் நிலையத்திற்கே சென்று நாங்கள் அந்த பரம்பரை இந்த பரம்பரை என அளந்துவிட்டு பிறகு வாங்கிக் கட்டிக் கொள்வர். அப்படித்தான் ஒரு போதை ஆசாமி என்ன செய்தார் என்பதை பார்க்கலாம். மதுபோதையில் காவல் நிலையத்திற்கு புகுந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு பெண் போலீஸை அநாகரீகமாக பேசியவர் நாகராஜ்.

இவர் வேப்பஞ்சேரியை சேர்ந்தவர். போலீஸார் வாகன சோதனை செய்தபோது மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜிடம் மடக்கிய போலீஸார் மொபட்டை பறிமுதல் செய்தனர். பிறகு அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த நபர் ஒரு டீசர்ட்டையும் நீல நிறத்தில் டவுசரையும் போட்டிருந்தார்.

அவர் போதையில் போலீஸாரை இஷ்டத்திற்கு வசை பாடினார். போலீஸாரை கண்ட படி பேசியுள்ளார். உடனே போலீஸார் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டவுடன் பம்மிய நாகராஜ், ஒவ்வொரு போலீஸாரையும் நீ எந்த ஊரு நீ எந்த ஊரு என கேட்க அவர்களும் நான் ஜப்பான், நான் கொரியா என பதிலளித்தனர்.

அப்போது போலீஸார் நீதான் தைரியமான ஆளாச்சே, முன்னாடி ஏதோ எங்களை சொன்னியே அதை இப்போ சொல்லேன் பார்ப்போம் என்றனர். அதற்கு நாகராஜ் அதெல்லாம் சொல்ல முடியாது என்கிறார். ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றிவிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என சண்டைக்கு வருமாறு சவால் விட்டார். போலீஸார் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் கேட்கவில்லை. காமெடி பீசு என சொன்ன போலீஸாரிடம் யார் காமெடி பீசு என அடிக்க பாய்ந்தார் நாகராஜ்.

விடாமல் போலீஸாரை விமர்சித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கொலை மிரட்டலுக்கு விடுத்தார். ஒரு நாற்காலியில் கால் மீது கால் போட்டுக் கொண்டு , இரு கலெக்டர்கிட்ட பேசுறேன் என சொல்லி நம்பரே டயல் செய்யாமல் ஏதோ பேசி கொண்டிருந்தார். தொடர்ந்து ரகளை செய்த நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயற்சித்தார்.

அப்போது வழுக்கி விழுந்ததால் எதிர்பாராதவிதமாத இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீஸார் அவருக்கு காலில் மாவுக்கட்டையும் போட்டுவிட்டுள்ளனர். அத்தனை ரவுசு செய்த நாகராஜ் தற்போது பாவமான முகத்துடன் படுத்த படுக்கையாக உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனினும் மாவுக்கட்டு போடப்பட்டதன் வரலாறை அறிந்த காரணம் அறிந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+