மிரட்டும் கோடை மழை... எலுமிச்சை விலை சரிவு - விவசாயிகள் கவலை!
நெல்லை: தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவிய போதிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் புளியங்குடியில் எலுமிச்சைககு என்று தனி மார்க்கெட் உள்ளது. இதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டுளளனர். நெல்லை மாவட்டத்தில் விளையும் அனைத்து எலுமிச்சைகளும் இங்கு கொண்டு வரப்பட்டு அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படும்.

மார்ச் முதல் மே மாதம் வரை எலுமிச்சை சீசன் காலமாகும். கேரளா, நாகர்கோவில், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட பட பகுதிகளுக்கும் எலுமிச்சை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
உடல் சூட்டைக் குறைக்கும்...
கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க எலுமிச்சை பழம் உதவுவதால், அதிக அளவில் விற்பனை ஆகும். நல்ல தரமான பழம் ஓன்றுரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படும். கடந்த வருடம் இதே கால கட்டத்தில் எலுமிச்சை பழம் ஓன்று ரூ.6 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது.
கோடை மழை...
ஆனால், இந்த ஆண்டு கோடை மழை பெய்து வருவதால் எதிர்பார்த்தப்படி எலுமிச்சை விற்பனை ஆகவில்லை. இதனால், எலுமிச்சை விலையும் குறைந்தது.
விலை சரிவு...
விலை குறைவுக்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு தொடர்ச்சியாக கோடையில் மழை பெய்வதாலும், ஆந்திராவில் இருந்து அதிக அளவு எலுமிச்சை பழங்கள் தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படடுளளதாலும் எலுமிச்சை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை...
மேலும் கோடை காலத்தில் கேரளாவுக்கு எலுமிச்சை அதிக அளவில் கொண்டு செல்லப்படும். தற்போது அங்கு நடக்கும் தொடர் போராட்டம் மற்றும் பந்த் காரணமாக எலுமிச்சை பழங்கள் குறைந்த அளவே அனுப்பப்படுகிறது' என கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications