கரையாறு அருகே "உறுமல்"... வனத்தில் விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வந்ததா?
நெல்லை: சமீபத்தில் நெல்லை அருகே ஊருக்குள் புகுந்து பிடிக்கப்பட்டு கரையாறு வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்ததாக செய்தி பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.
நெல்லை திருமால் நகரில் கடந்த 18ம் தேதி சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை பயமுறுத்தியது. இது பல வீடுகளில் புகுந்த அட்டகாசம் செய்ததால் 4 பேர் காயம் அடைந்தனர்.

5 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் கரையார் பாபநாசம் அணைக்கட்டு அருகே உள்ள கவுதலை ஆற்றுபகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
நெல்லைக்கு சிறுத்தை எப்படி வந்தது என்பது குறிதது வனத்துறையினர் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரையாறு மெயின் ரோட்டில் அதிகாலை 2 மணிக்கு சிறுத்தையின் உறுமல் சத்தத்தை அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
அதன் உறுமல் விடியும் வரை கேட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை வி்ட்டு வெளியே வரவில்லை. வெளியே வேலைக்கு சென்றிருந்த உறவினர்களையம் செல்போன் மூலம் ஊருக்கு திரும்பாமல் விடிந்த பிறகு வருமாறு எச்சரிக்கை செய்தனர்.
வனத்திற்குள் பிடிக்கப்பட்டு விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ரோட்டுக்கு வந்து உறுமி இருக்க கூடும் என்ற பேச்சும் பலமாக எழுந்துள்ளது. திருமால் நகரை கலங்கடித்த சிறுத்தை இப்போது மலை அடிவார பகுதி மக்களின் அடிவயிற்றை கலங்கடிக்கத் தொடங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications