காந்தி போல இருவர் தோள் தாங்க எழுந்து நடந்த "ஹே ராம்"!
சென்னை: இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு முடித்து விட்டு சென்னை வந்த நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்தார். காலில் காயம் ஏற்படவே, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்ட அவரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் எவரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு கமல்ஹாசனின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
. ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்
— Kamal Haasan (@ikamalhaasan) August 2, 2016
இந்நிலையில் தற்போது கௌதமி, ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் மூவர் மட்டுமே அவரை பார்த்து கொள்கின்றனர். கமலின் உடல்நிலை நன்கு தேறி உள்ளதாகவும், விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்றும் நேற்று கவுதமி கூறினார்.
தனது உடல் நிலை குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம் என்று கூறியுள்ளார். விரைவில் நடந்து வந்து நன்றி கூறுவேன் என்று வாட்ஸ் அப் மூலம் நன்றி சொன்ன கமல், இன்று தன்னால் எழுந்து நிற்க முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications