சென்னையில் வெயிலுடன் சிலு சிலு சாரல் மழை.. சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ராயப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையின் மையப்பகுதிகளான ராயப்பேட்டை, போயஸ் கார்டன், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இன்று சென்னையின் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் குமரிக்கடல் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது வலுவிழந்து காற்றின் மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.

பெய்யென பெய்..
இந்த மேலடுக்கு சுழற்சி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் சிலு சிலு..
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது சென்னை ராயப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, போயஸ் கார்டன், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

மழையும் வெயிலும்..
சென்னை நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், இடை இடையே லேசான மழை பெய்து சென்னையை குளிர்வித்துள்ளது சாரல் மழை. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், பல இடங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications