தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவர் பலி.. 14 ஆடுகளும் பலியான பரிதாபம்
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 14 ஆடுகளும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணபதி பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை கணபதிபட்டி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாரியப்பன், அவர் மேய்க்கச் சென்ற 14 ஆடுகளும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications