உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாய்-மகன் பலியான சோகம்
உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நேற்றிரவு பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் தாய்-மகன் இருவரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கோடைக்கால வெயில் வாட்டி வதைத்து வருவதாலும், கூடவே அனல்காற்று அள்ளி வீசுவதாலும் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்றிரவும் கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வடமாவட்டங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு, வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் சூறை காற்றுடன் மழை கொட்டியது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதில், உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் சகுந்தலா என்பவரும், அவரது மகன் இளவரசன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications