கிரண்பேடியைப் போல துடைப்பத்தையும் கையில் பிடித்த பன்வாரிலால்
புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை போல் களத்தில் இறங்கி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஆய்வு நடத்தினார்.
Recommended Video

கோவை: புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை போல் களத்தில் இறங்கிய தமிழக ஆளுவர் பன்வாரிலால் புரோஹித்தும் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.
தமிழகத்துக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். தற்போது தமிழக மக்களுடன் தமிழில் கலந்துரையாட தமிழ் ஆசிரியர் மூலம் தமிழ் பயின்று வருகிறார்.

இந்நிலையில் கோவையில் நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கோவையில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தினார்.
காந்திபுரம் பேருந்து நிலைத்தில் சுமார் 20 நிமிடங்கள் அவர் ஆய்வு நடத்தினார். ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை போல் தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் அதிரடிகளை செய்து வருகிறார். அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் நடத்திய ஆய்வு குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications