லிங்கா பிரச்சினை... தயாரிப்பாளர் சங்கத்தில் சமரசப் பேச்சு!
லிங்கா பிரச்சினையில் சமரசத் தீர்வு காண, தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர், பிச்சைப் போராட்டம் அறிவித்த லிங்கா விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தினர்.

லிங்கா படத்தை வெளியிட்டு, பெரும் கட்டணத்தை முதல் வாரத்தில் வசூலித்துக் குவித்த விநியோகஸ்தர்கள், நஷ்டக் கணக்கு காட்டியுள்ளனர்.
முதல் வாரம் முழுக்க பார்வையாளர்களிடம் ரூ 250 வரை டிக்கெட்டை வசூலித்த இவர்கள், இதுவரை அந்தக் கணக்கை காட்டாமல், ரூ 10 அல்லது அதற்கும் குறைவாக டிக்கெட் விற்றதாக கணக்கு காட்டியுள்ளனர் (மால்கள் விதிவிலக்கு).
இந்த அடிப்படையில் லிங்காவால் நஷ்டம் என்று கூறி ரூ 33 கோடி வரை திருப்பித் தரக் கோரி, ரஜினி வீட்டு முன் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
'இது ரஜினிக்கு எதிரான பக்கா பிளாக் மெயில்' என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டித்தனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் இறங்க முடிவு செய்து, கடுமையான எதிர்ப்பு அறிக்கைகள், போஸ்டர்கள் வெளியிட ஆரம்பித்தனர்.
இனியும் இந்த நிலை தொடரக்கூடாது என முடிவு செய்த ரஜினி, இதனை பேசி முடித்துவிடுமாறு திரையுலக அமைப்புகளிடம் கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நேற்று சமரச பேச்சு வார்த்தையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிச்சை எடுப்பு போராட்டம் அறிவித்த லிங்கா விநியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். லிங்கா தயாரிப்பாளர் ஆரம்பத்தில் அறிவித்த 10 சதவீதத்தைவிட இன்னும் சற்று கூடுதலாகத் தர சம்மதித்துள்ளார். ரூ 10 கோடி வரை இந்த நஷ்ட ஈடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
காரணம், தியேட்டர்களில் வசூலித்த உண்மையான தொகை எவ்வளவு என்பது திரையுலகின் அனைத்து தரப்பினருக்கும் தெரியும் என்பதால், விநியோகஸ்தர்கள் கேட்கும் தொகையைத் தர முடியாது எனக் கூறிவிட்டனர்.
திங்களன்று இறுதிப் பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications