தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது.. என்ன செய்யப் போகிறோம்.. திருமாவளவன் வேதனை
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது. தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் மயமாகியுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நினைவு தினமான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஊழல் மையமாக காட்சி அளிக்கிறது. எங்கு திரும்பினாலும் சாராயம் ஆறாய் ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றை முதலில் ஒழிக்க வேண்டும்.
இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தை தீய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றன. இதில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் பிரதமருக்கு அஞ்சுவது வேதனைக்குரியது. மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது கண்டனத்திற்குரியது.
கர்ணனுக்கு எதிராக அளித்த தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அரசியல் சட்ட விதியை மீறும் செயலாக மாறிவிடும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications