2011 உள்ளாட்சித் தேர்தல் ப்ளாஷ்பேக்: கூட்டணியை கைவிட்ட அதிமுக, திமுக - தனித்து போட்டியிட்ட கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டது... உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

சட்டசபை தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பு நிலவியது. ஆளும் அதிமுக ஒன்றிரண்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்தது.

திமுகவோ காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் எதிராக தேமுதிக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் இணைந்து ஓரணியில் நின்றன. பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. பாஜகவும் இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.

இத்தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் தவிர்த்த இதர கட்சிகள் போணியாகவில்லை. அதிமுக ஆட்சியைத் தக்க வைத்தது. திமுக பிரதான எதிர்க்கட்சியானது. தங்களது கணிசமான வாக்கு சதவீதத்தையும் பிறகட்சிகள் பறிகொடுத்தன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் முடிவடைந்த சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தல் வருவதால் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் களம் எப்படி இருந்தது? கட்சிகள் சாதித்தவை என்ன என்பது பற்றிய ஒரு ப்ளாஷ்பேக்கை பார்ப்போம்:

தனித்து போட்டியிட்ட அதிமுக

தனித்து போட்டியிட்ட அதிமுக

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் இணைந்த ஒரு கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதிமுகவோ அதிரடி காட்டி தேமுதிக, இடதுசாரிகளை கடைசிவரை காக்க வைத்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுக தனித்தே களமிறங்கியது..

தேமுதிக- மார்க்சிஸ்ட்

தேமுதிக- மார்க்சிஸ்ட்

அதிமுகவுடனான கூட்டணி அமையாமல் ஏமாற்றம் அடைந்த தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்தே தேர்தலை எதிர்கொண்டது.

தனித்து களம் கண்ட திமுக

தனித்து களம் கண்ட திமுக

இதேபோல் திமுகவும் காங்கிரஸை கழற்றிவிட்டு தனியே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இன்னும் சொல்லப் போனால் திமுக தனித்து இறங்குவதாக முதலில் அறிவித்ததால் இதற்குப் போட்டியாக அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டு தனித்து களமிறங்கியது.

பாமக

பாமக

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தம்முடைய அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானமே போட்டார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள், பாமகவுடன் கூட்டணிக்குப் போகவில்லை; அதே நேரத்தில் இணக்கமான போக்கை கடைபிடித்தது. இதனால் தாங்கள் போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்போம் என பாமக அறிவித்தது.

மதிமுக

மதிமுக

மதிமுக, இடதுசாரிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணிக்காக முயற்சியை தேமுதிக விரும்பியது. ஆனால் மதிமுக அப்போது பிடிகொடுக்காமல் தனியே தேர்தலை சந்திப்பதாக அறிவித்து களமிறங்கியது.

வி.சிறுத்தைகள் கூட்டணி

வி.சிறுத்தைகள் கூட்டணி

மாற்று அரசியலுக்கு முன்னோட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ கட்சிகள், அமைப்புகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் ஓரணியில் திரட்ட விடுதலைச் சிறுத்தைகள் முயற்சித்தும் பலனளிக்காமல் போனதால் இந்த முயற்சியை அக்கட்சி மேற்கொண்டது.

தனியே தன்னந்தனியே..

தனியே தன்னந்தனியே..

திமுகவால் கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா ஆகியவையும் தனித் தனியே களம் கண்டன. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சியும் தனித்தே போட்டி என அறிவித்தது. புதிய தமிழகம் கட்சியும் தனித்தே களம் கண்டது.

பிற கட்சிகள்...

பிற கட்சிகள்...

இவை தவிர ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய ஜனநாயக கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், புரட்சி பாரதம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+