தமிழக உள்ளாட்சிக்கு அக்., 24க்குள் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனவும் அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3வது வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த இந்த வழக்கு விசாரணையில், மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் செப்டம்பர் 3வது வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி வரையறை உடனடியாக அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications