நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியாளர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழக அரசு உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதற்கேற்ப, வரும் 18-ஆம் தேதி புதன்கிழமை நீலகிரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்குப் பதிலாக 2014 ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும். இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 18-ஆம் தேதி புதன்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் வழக்கம்போல நடைபெறும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் இன்று ஆருத்ரா தரிசனம் கொண்டாடப் பட இருப்பதால் அங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications