இழுபறிக்கு ஃபுல் ஸ்டாப்.. மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு.. யார் இவர் தெரியுமா?
மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவித்துள்ளது. மேலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சுதா யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 இடங்கள் திமுக கூட்டணியில் வழங்கப்பட்டன. இதில் மயிலாடுதுறைக்கு பதில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன.

நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவுக்கு வர உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமலே இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும் அதிருப்தியடைந்தன. கடந்த முறை இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்ற நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியதால் திமுகவினரும் அதிருப்தியடைந்தனர்.
மேலும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்புக்கான தாமதம் என்னவென்றால் அதிகமானவர்கள் அந்த தொகுதியை கேட்டது தான். அதாவது திருச்சி எம்பியாக உள்ள திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரி எம்பியாக உள்ள டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர், பிரவீன் சக்கரவர்த்தி, சி.டி.மெய்யப்பன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்பட பலர் இந்த தொகுதிக்காக டெல்லி மேலிடத்திடம் லாபி செய்தனர்.
இதனால் யாருக்கு சீட் வழங்குவது என்பது பெரிய பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் தான் நாளை வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில் இன்று இரவு 8.45 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அதன்படி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஆர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடிப்படையில் வழக்கறிஞராக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். பல மூத்த தலைவர்கள் மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்ற போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் சுதாவை வேட்பாளராக்கி உள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறைக்கு வேட்பாளர் அறிவிப்பு செய்ததன் மூலம் அந்த தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா, அதிமுக சார்பில் பாபு, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் ஆகியோர் இடையே போட்டி நிலவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications