சவுமியா அன்புமணிக்கு ரூ 48 கோடி சொத்து- 2019-ல் ரூ23 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்த கணவர் அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் (தர்மபுரி) போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தமக்கு ரூ 48 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தருமபுரி பாமக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் அரசாங்கம். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்பி. சவுமியாவின் சகோதரர் விஷ்ணுபிரசாத், சிட்டிங் காங்கிரஸ் எம்பி. கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

Lok Sabha Election 2024 PMK Sowmya Anbumani holds assets worth Rs 48 crore

லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சவுமியா அன்புமணி தமது வேட்பு மனுவில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு விவரம்:

அசையா சொத்துகள்: ரூ48.18 கோடி

அசையும் சொத்துகள்: ரூ12.05 கோடி

வங்கி கடன்கள்: ரூ 9.15 கோடி

கணவர் அன்புமணி பெயரிலான அசையா சொத்துகள்: ரூ6.85 லட்சம்

கணவர் அன்புமணி பெயரிலான அசையும் சொத்துகள்: ரூ67 லட்சம்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த சொத்து மதிப்பு விவரம்:

அன்புமணி ராமதாஸ் பெயரிலான சொத்துகள்: ரூ 33,85,35,112கோடி

அன்புமணி ராமதாஸ் அசையும் சொத்து ரூ33,64,543

மனைவி சவுமியா அன்புமணி பெயரிலான அசையா சொத்துகள்: ரூ23,37,57,019 கோடி

மனைவி சவுமியாவின் அசையும் சொத்துகள்: 25.90 கிலோ வெள்ளி
2.9 கிலோ தங்கம்: 151.5 கேரட் வைரம் உட்பட மொத்தம் ரூ 9,47,22,445

வங்கிக் கடன்கள்: ரூ7,26,81,681 லட்சம் கோடி

தியாகராயர் நகர் வீடு மனைவி சவுமியா பெயரில் உள்ளது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரிடம் தோல்வியைத் தழுவி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+