லோக்சபா தேர்தல்: தஞ்சையை குறிவைக்கும் டி.ஆர்.பாலு- கொதிக்கும் பழனிமாணிக்கம்
சென்னை: தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்த சம்பவம் அக்கட்சியின் மற்றொரு பிரிவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை திமுக கட்சித் தலைமை பெற்று வருகிறது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு கடந்த சில ஆண்டுகளாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவரான டி.ஆர்.பாலு தனது சொந்த ஊரான மன்னார்குடி அமைந்துள்ள தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

இந்த தகவல் அறிந்த அத்தொகுதியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனிமாணிக்கம் மற்றும் அரவது ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்களாம்.
மேலும், தஞ்சை தொகுதிக்கு டி.ஆர். பாலு விருப்ப மனு அளித்த தகவல் கிடைத்ததும் பழனிமாணிக்கம் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பாலு விருப்ப மனு தாக்கல் செய்த தகவல்கள் குறித்து சில சம்பவங்களை கூறியதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications