ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் சென்னை வந்த லண்டன் டாக்டர்
சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் மீண்டும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான அப்பல்லோ மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும் லண்டனை சேர்ந்த டாக்ரடர் ரிச்சர்ட் பியல் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர்.

பியல் லண்டனுக்கும் சென்னைக்குமாக பயணம் மேற்கொண்டுள்ளார். 3வது முறையாக சென்னை வந்த அவர் கடந்த 26ம் தேதி லண்டனுக்கு சென்றார். இதையடுத்து எய்ம்ஸ் டாக்டர் கில்நானியும் டெல்லிக்கு கிளம்பினார்.
இந்நிலையில் பியல் தீபாவளி அன்று சென்னை திரும்பி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார். நேற்றும் அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் நேற்று காலை 11.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு வந்தார். மாலை 6.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அவர் நள்ளிரவு சிங்கப்பூருக்கு கிளம்பினார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த பிசியோதெரபி நிபுணர் சீமா மற்றும் ஒரு பெண் பிசியோதெரபி நிபுணரும் நேற்று இரவு சென்னை வந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications