அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்...குழந்தை உள்பட 5 பேர் பலி...
திருநெல்வேலி : ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாயினர்
திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு தென்காசி நோக்கி சென்றது. இரவு சுமார் 10 மணியளவில் ஆலங்குளத்தை கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த லாரி அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசுப் பேருந்து பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கோவிந்தபேரியை சேர்ந்த தூரியம்மாள், தென்காசியை சேர்ந்த கோமு, கீழப்பாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் வெள்ளப்பாண்டி, தென்காசி ஆயிரப்பேரியை சேர்ந்த சிவா மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் பலியாயினர்.
10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications