பெண் போலீசை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி: டிரைவர் கைது, வாகனம் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வாகன சோதனையின்போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர. தப்பி ஓடிய இன்னொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே கொல்லங்கோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி ரமணிபாய் தலைமையிலான போலீசார் காக்காவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் மெர்சி ரமணிபாய் மற்றும் போலீசார் மீது மோதுவதுபோல் வேகமாக வந்தார்.

உஷாரான போலீசார் சற்று விலகிக் கொண்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை துரத்திப் பிடித்தனர். லாரியில் இருந்த ஒருவர் தப்பியோடினார். டிரைவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அடைக்காகுழியைச் சேர்ந்த சத்தியநேசன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
லாரியை சோதனை செய்தபோது அதில் பாறை பொடி இருந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட சத்தியநேசனிடம் தப்பியோடிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தப்பியோடியவர் சூரியகோட்டையைச் சேர்ந்த அஜிகுமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி ரமணிபாய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சத்தியநேசன், தப்பியோடிய அஜிகுமார் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications