டெல்லியிலிருந்து சைக்கிள் லோடு ஏற்றி வந்த லாரி ஒட்டுநர் படுகொலை!
கரூர்: டெல்லியிலிருந்து சைக்கிள் லோடு ஏற்றி வந்த லாரியின் டிரைவர், கரூர் அருகே நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பழனிசாமி. லாரி ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். டெல்லியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மிதிவண்டிகளை லாரியில் ஏற்றி வரும் போது அரவக்குறிச்சி அருகே சுங்கசாவடியை அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி இறங்கி சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து அவருடன் வந்த காட்டுபுத்தூரை சேர்ந்த துனை ஓட்டுநர் சதீஷ் குமார் லாரியை விட்டு இறங்கி தேடியுள்ளார். அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்களிடம் தகவல் சொல்ல அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த காட்டு பகுதியில் .தலையில் ஏதோ ஆயுதத்தால் தாக்கி கழுத்தை நெறித்து பழனிசாமி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஜோஷி நிர்மல் குமார் சம்பவ இடத்திற்க்கு உடனடியாக விரைந்து வந்தார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரனை செய்து வருகின்றனர்.
பழனிசாமி வழிப்பறி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது எதாவது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications