பள்ளி சுவர் மீது மோதிய தண்ணீர் லாரி.. 6 வயது மாணவி பலியான பரிதாபம்!

மதுரை அருகே பள்ளி சுவர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 2ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்ததில் 2 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில், தண்ணீர் லாரி பிரேக் பிடிக்காமல் பள்ளி சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த 2 மாணவிகள் காயமடைந்தனர்.

Lorry hit the school wall near Madurai 6 years old girl died

இதில், 2ம் வகுப்பு படிக்கும் பவித்ரா என்ற மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து இறந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி பவித்ராவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரி மோதி சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+