திருச்சியில் ஐ.ஜி. அலுவலகம் அருகே நின்ற அதிமுக நிர்வாகியின் லாரி அபேஸ்
திருச்சி: திருச்சியில் காவல்துறை ஐ.ஜி. அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட அதிமுக நிர்வாகியின் லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பாசறை துணைத் தலைவராக பதவி வகித்து வருகின்றார். அவர் லாரி மூலம் போக்குவரத்து தொழில் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று சுப்ரமணியபுரம் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து அவர் தனது அலுவலக ஆட்கள், கட்சி தொண்டர்கள் மூலம் லாரியை திருச்சி முழுக்க வலை வீசி தேடினார். ஆனால் லாரி கிடைத்தபாடு இல்லை.
இதையடுத்து அவர் இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியையும், அதை திருடிச் சென்ற மர்ம நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications