எழுந்து வா.. கோஷமிட்டபடி கருணாநிதிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
திமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியதை தொடர்ந்து தொண்டர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.
நேற்றிரவு முழுவதும் தலைவா எழுந்து வா என முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் தொண்டர்களின் வருகை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

200 போலீசார்
காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து
அரசியல் கட்சியினரும் நேற்றிரவு முதல் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டும் என அவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொண்டர்கள் வருகை
இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.

உடன் பிறப்பே
ஆண்கள் பெண்கள் என பலரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் காவேரி மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர். தங்களின் தலைவர் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என கையசைப்பார் என தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications