கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக தொண்டர்கள்.. மருத்துவமனை அறிக்கையால் நிம்மதி

கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள் மருத்துவமனை அறிக்கையால் நிம்மதி அடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள் மருத்துவமனை அறிக்கையால் நிம்மதி அடைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி

இந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார்.

உடல்நிலை சீராக உள்ளது

உடல்நிலை சீராக உள்ளது

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாயின. கருணாநிதியில் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

குவியும் தொண்டர்கள்

குவியும் தொண்டர்கள்

கருணாநிதியின் இதயதுடிப்பு உள்ளிட்டவையும் நார்மலாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முதலே திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை

இன்று மாலை முதலே அதிகளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தற்போதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் ஏராளமான அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டர்கள் நிம்மதி

தொண்டர்கள் நிம்மதி

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+