மெரினாவில் மாணவர் போராட்டம்? 2-வது நாளாக போலீசார் குவிப்பு- தீவிர கண்காணிப்பு!
சென்னை மெரினா கடற்கடையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீஸ் கண்காணிப்பு தொடர்கிறது.
சென்னை: மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீஸ் கண்காணிப்பு நீடிக்கிறது. அதிவிரைவு மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப்புரட்சியை போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் நேற்றுக் காலை முதல் தகவல் பரவியது.

இதையடுத்து அங்கு இளைஞர்கள் திரள்வதை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக செல்பவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசாரின் கெடுபிடியால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இளைஞர்கள் திரண்டுவிட்டால் அவர்களை கலைப்பது கடினம் என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications