காற்றழுத்தம் வலுவடைகிறது: கடல் கொந்தளிக்கும், பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு வார்னிங்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காற்றழுத்தம் வலுவடைகிறது: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications