சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஐவர் பலி… சிறுவன் படுகாயம்
சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 5பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெங்கடேசன் என்பவர் மறைமலைநகரில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். அதனால், கடைக்கு பயன்படுத்தப்படும், 8 எரிவாயு சிலிண்டர்களையும் வீட்டில் வைத்துச் சென்றிருந்தார்.
சனிக்கிழமை இரவு வீடு திரும்பிய அவர், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை உணராமல் மின் சுவிட்சை போட்டதால், விபத்து நேரிட்டது. இதில், 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், வெங்கடேசன், அவரது மனைவி, குழந்தை மற்றும் அண்டைவீட்டு குழந்தை ஆகிய நான்கு பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி நேற்று உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 17 சதவிகித தீக்காயமே சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Karuppu vs Blast: கருப்பு மற்றும் பிளாஸ்ட் வசூல் போட்டி? பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்? அதுவும் நேற்றைய நிலவரம் மாஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications