லோக்சபா தேர்தல்: திமுகவுக்கு அருந்தமிழர் முன்னேற்றக் கழகம் ஆதரவு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க உள்ளதாக அருந்தமிழர் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அருந்தமிழர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தபோது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. திமுகவை வெற்றி பெற வைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மென்மேலும் உயரும்.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய மூலகாரணமே தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவர் ஒருவரால் மட் டுமே இடஒதுக்கீட்டினை சீர்செய்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.
சென்ற திமுக ஆட்சியின்போது எங்கள் இனமான அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடாக 3 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இந்த உள் இடஒதுக்கீட்டின் மூலம் எங்கள் இன மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளார்கள்.
மேலும், எங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி தர வலியுறுத்துவோம். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் எங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டினை உயர்த்தி தர முடியும் என நம்புகின்றோம்.
எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு எங்கள் கட்சி அயராது பாடுபடும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications