பாமகவின் 2வது லிஸ்ட்: விழுப்புரத்தில் வடிவேல் ராவணன், மயிலாடுதுறையில் அகோரம் போட்டி
சென்னை: பாமக தனது 2வது லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்டோபர் 21ம் தேதி தனது முதல் வேட்பாளர் பட்டியலை அது வெளியிட்டது.
முதல் பட்டியலில் ஐந்து வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆரணியிலும், இன்னொரு மாஜி அமைச்சர் ஆர்.வேலு அரக்கோணத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி லோக்சபா தொகுதியில், பாமக சார்பில் அனந்தராமனும், சேலம் தொகுதியில், ஆர். அருளும் போட்டியிடுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தனது கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கூட்டணியில் இடம் பெறும் அமைப்புகள், கட்சிகள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். கூட்டணிக்கு சமூக ஜனநாயகக் கூட்டணி என்று ராமதாஸ் பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது 2வது வேட்பாளர் பட்டியலை பாமக வெளியி்ட்டுள்ளது. விழுப்புரம் தனி தொகுதியில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுவார் என்றும், மயிலாடுதுறையில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அகோரம் போட்டியிடுவார் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications