கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் மு.க.அழகிரி !
உடல்நலக்குறைவால் ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஊட்டச்சத்து, நீர்ச் சத்து குறைபாடு காரணமாக, கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ஒருவார சிகிச்சைக்கு பின்னர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார். வீட்டில் முழுமையாக ஓய்வு எடுக்கும்படி கருணாநிதிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென தொண்டை, நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக அவர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளாத மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று மாலை முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதனிடையே கவிஞர் வைரமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications