சொத்து விவரத்தை மறைத்த புகார்: மு.க.அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு!
மதுரை: சொத்து விவரத்தை மறைத்ததாக மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த தலத்தான்குடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளித்தார். அதில், ''முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.

அதில் அவருக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட காட்டூரில் உள்ள பல ஏக்கர் நிலத்தை மறைத்து விட்டார்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து திருவாரூர், மதுரை ஆட்சியர்கள் விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்பேரில் திருவாரூர் ஆட்சியர் விசாரணை நடத்தி, மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைத்தார். அதன்பேரில் மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன், மதுரை 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அழகிரி மீது தனிநபர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications